Friday, February 23, 2007

உரத்த சிந்தனை!

ஆத்தா குடுத்த ஒத்த ரூவா
ராட்டினம் சுத்தயில தொலஞ்சுடுச்சு
அன்று
தொலஞ்சது ஒரு உண்மை!
இன்னமும்
தொலைக்கப்படும் உண்மைகள்
வயதுக்கேற்ப வளர்ந்தபடி...
ராட்டினம் சுத்தியது தவறா?
ஒத்த ரூவா தொலச்சது தவறா?
உதைக்குப் பயந்துஉண்மை தொலச்சது தவறா?
குறுக்கிட்டது பெண்குரல்;
"சார், சிதம்பரம் லைன்ல இருக்கார்"
"நான் இல்லைன்னு சொல்லு"
தொடர்ந்தது உரத்த சிந்தனை!

6 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் நினைக்கறது உண்டுங்க.பயமுறுத்தியே நாம் தான் பொய் சொல்ல பழக்கறோம்னு ..
அதுனால சொல்லறது , பொய் சொன்னா கடவுளும் அம்மாவும் கண்டுபிடிச்சுடுவாங்கன்னும், உண்மையா ஒத்துகிட்டா நல்லபேர் கிடைக்கும்ன்னும்..இது கொஞ்ச நாள் சரியா வரும்.பெருசாகிர வரை.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//பயமுறுத்தியே நாம் தான் பொய் சொல்ல பழக்கறோம்னு ..//
சரியாக சொன்னீங்க லட்சுமி! இப்போ பயமுறுத்துவதற்குக்கூட பொய் தான் சொல்லவேண்டி இருக்கு!

உண்மையைச் சொல்ல ஒருவன் யோசிக்கும்போதே பொய்க்கான யோசனையும் நடக்கிறது! இறுதியில் இரன்டிலொன்று முந்துகிறது!

மங்கை said...

என்ன என்னமோ சொல்லாமுன்னு தோனுது..ஆனா..குழப்பவாதின்னு சொல்லிடுவாங்களோனு பயமா இருக்கு.. அதுனால...

லட்சுமி சொன்னதே தான் நானும்... பயம் தான் பொய்யும் சொல்ல வைக்குது..உண்மையும் சொல்ல வைக்குது...

naan naathigan said...

Infact in todays world we are one among the preachers.

we know but we darenot do what should be done. The poors and illetrates does not know and the question of daring doesnt arise.

good luck

balan

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//குழப்பவாதின்னு சொல்லிடுவாங்களோனு பயமா இருக்கு.. //
குழப்பினால் தான் ஒரு தெளிவு கிடைக்கும்.

//லட்சுமி சொன்னதே தான் நானும்...//
பரவாயில்ல... ரொம்ப குழப்பாம உண்மைய சொல்லிட்டீங்க மங்கை!

//Infact in todays world we are one among the preachers.//
Yes balan. No risk for preachers, only for followers!

NSK said...

உரத்த சிந்தனைக்கு பதிலாக உறித்த சி்ந்தனை ஏற்பட்டால் நல்லதோ ?