Tuesday, February 13, 2007

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமூக சேவை!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக வெளிநாட்டுக் கலாச்சாரமான "காதலர் தினத்தை" எதிர்த்து, காதலர் தினத்தன்று சென்னை நகர வீதிகளில் ஜோடியாக திரியும் காதலர்களைப் பிடித்து கட்டாயத் திருமணம் நடத்தி வைக்கும் சமூக சேவை நடக்க இருக்கிறதாம்! அவர்களின் விழிப்புணர்ச்சியைப் பாராட்டுகிறேன். அவர்களின் நன்மை கருதி கூடுதலாக சில யோசனைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.

1. ஜோடிகளைப் பிடித்து கட்டாய திருமணம் செய்யும் முன்பு அவர்கள் காதலர்கள் தானா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அண்ணன், தங்கைகூட சாலையில் சேர்ந்து செல்லக்கூடும், அப்புறம் உங்களுக்கு தர்ம அடி விழுவது நிச்சயம்!

2. ஜோடி மேஜர் தானா என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் பால்ய விவாகம் செய்து வைத்த குற்றத்திற்கு ஆளாகக்கூடும்! ஜெயிலில் கம்பி எண்ண வேண்டும்!

3. ஜோடிகளின் பெற்றோர் எந்த கட்சி என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் சொந்த கட்சிக்குள்ளேயே அடிதடி நடக்கவும் வாய்ப்புண்டு!

4. உங்கள் சமூக சேவையை இதோடு நிறுத்தாமல் தொடர வேண்டும். உதாரணமாக, தமிழ் மக்கள் வீட்டிற்குள்ளேயே அமைதியாக கும்பிட்டு, கொண்டாடி வந்த பிள்ளையார் சதுர்த்தி திருநாளை வடநாட்டு கலாச்சாரதோடு குழப்பி ஆயிரக்கணக்கில் பிரம்மாண்டமான பிள்ளையார்களைச் செய்து, ஊர்வலம் நடத்தி மக்களின் நிம்மதியையும், பிள்ளையாரின் நன்மதிப்பையும் கெடுக்கும் சக்திகளை ஒடுக்க முன்வர வேண்டும்!

5. தமிழ் மக்களின் மஞ்சள் நீரூற்றும் பொங்கல் விழாக்களை அழித்து, வண்ணக்கலவைகளை ஊற்றும் வட நாட்டு ஹோலிப்பண்டிகைகளை வளர்க்கும் சக்திகளை ஒடுக்க வேண்டும்!

6. தமிழ் நாட்டுக் கடவுள் அல்லாத ராமருக்காக, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி செங்கற்களை வாங்கிச் சென்ற கூட்டத்தைக் கண்டுபிடித்து முருகப்பெருமான் சன்னிதியில் நிறுத்த வேண்டும்! இப்போதைக்கு இது போதும்!

6 comments:

யெஸ்.பாலபாரதி said...

:-)

உம்மைத்தேடி ஆட்டோ வருதாம். பார்த்து இருந்து கொள்ளும்!

:-)

அசுரன் said...

//4. உங்கள் சமூக சேவையை இதோடு நிறுத்தாமல் தொடர வேண்டும். உதாரணமாக, தமிழ் மக்கள் வீட்டிற்குள்ளேயே அமைதியாக கும்பிட்டு, கொண்டாடி வந்த பிள்ளையார் சதுர்த்தி திருநாளை வடநாட்டு கலாச்சாரதோடு குழப்பி ஆயிரக்கணக்கில் பிரம்மாண்டமான பிள்ளையார்களைச் செய்து, ஊர்வலம் நடத்தி மக்களின் நிம்மதியையும், பிள்ளையாரின் நன்மதிப்பையும் கெடுக்கும் சக்திகளை ஒடுக்க முன்வர வேண்டும்!

5. தமிழ் மக்களின் மஞ்சள் நீரூற்றும் பொங்கல் விழாக்களை அழித்து, வண்ணக்கலவைகளை ஊற்றும் வட நாட்டு ஹோலிப்பண்டிகைகளை வளர்க்கும் சக்திகளை ஒடுக்க வேண்டும்!

6. தமிழ் நாட்டுக் கடவுள் அல்லாத ராமருக்காக, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி செங்கற்களை வாங்கிச் சென்ற கூட்டத்தைக் கண்டுபிடித்து முருகப்பெருமான் சன்னிதியில் நிறுத்த வேண்டும்! இப்போதைக்கு இது போதும்!///

Very Good அப்பு....

ஆட்டோ வந்தாக்க புரட்சிகர அமைப்பு குண்டாந்தடியோட வந்து மண்டையொடைக்கும்னு சொல்லுங்க.... ஏற்கனவே அவிங்க மண்டைய ஹைகோர்ட் வாசலிலேயே வைச்சி உடைச்ச அனுபவம் இருக்கு.

:-))

அசுரன்

தங்கவேல் said...

அகண்ட பாரதக் கனவு காண்பவர்களுக்கு நல்ல குட்டு வைத்துள்ளீர்கள்.

அழகு said...

வத்தி ... வத்தி ... வத்திராயிருப்பா?

வர்ரோம் ... இரு!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

காதலர் தின கொண்டாட்டத்தில் எனக்கும்கூட பெரிதும் உடன்பாடு கிடையாது. ஆனால் அதற்காக தனிநபர் உரிமையில் தலையிடுவது போல இந்த விஷயத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரசியல் நடத்தப் பார்ப்பது தவறு. மனதில்பட்டதை புரியும்படியாகவும், நயமாகவும் சொல்ல நினைத்தேன். புரிந்துகொண்டால் சரி!.

நானே தினமும் அலுவலகத்திற்கு பாதிதூரம் ஆட்டோவில் தான் பயணம் செய்கிறேன்... ஆட்டோ ஒன்றும் புதிதல்ல!

அருட்பெருங்கோ said...

ஆட்டோ கன்ஃபார்ம்டு ;-)))