Monday, February 5, 2007

கவுண்டமணியும் நகைச்சுவையும்

நேற்று கேபிள் டிவியில் கவுண்டமணி நகைச்சுவை தொகுப்பினைக் காண நேர்ந்தது.அதில் ஒரு காட்சியில் சொந்தமாக கடை நடத்தும் சவரத் தொழிலாளியாக கவுண்டமணி நடித்திருப்பார். தங்கள் அலுவலகக் குழப்பங்களைப்பற்றி பேசிக்கொள்ளும் இருவர், இந்த வேலை பார்ப்பதற்குப் பதில் பார்பர் வேலைக்குப் போகலாம் என்று சலிப்புடன் கூறுவார்கள். சவரம் செய்தபடி இந்த பேச்சுக்களை கவனிக்கும் கவுண்டமணி, உடனே அவனைப்பார்த்து "சவரம் செய்யத் தெரியுமா என்று கெட்கிறார். அவனோ தெரியாது எனச் சொன்னதும், "பிறகு எதற்காக எங்கள் தொழிலைப் பற்றி கேவலமாக பேசுகிறாய்? நாங்க உன்னோட தொழிலைப் பற்றி எதாவது கேவலமா பேசுறோமா? இந்தத் தொழிலை பார்க்கறதுக்கு பதிலா ஒரு ஆபீசர் ஆகலாம், டாக்டர் ஆகலாம்னு சொல்றோமா? என கேள்வி கேட்டு அவர்களையும் சிந்திக்க வைத்து பார்ப்பவர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறார். கவுண்டமணிய் என்றதும் செந்திலை உதைப்பதும், கோவை சரளா போன்ற மனைவியாக நடிக்கும் பெண்களிடம் பம்முவதும் மட்டுமே பலருக்கும் தெரியும். நகைச்சுவை உலகத்தில் சில நடிகர்கள் ப்ரேமில் வந்து நின்றாலே மக்கள் சிரிக்கத் தொடங்குவார்கள். அவர்களில் நாகேஷ், சந்திரபாபுவிற்கு அடுத்து கவுண்டமணியை சொல்லலாம். தற்போது வடிவேலு அந்த வரிசையில் வருகிறார். கோவில் பூசாரி வேடம் முதலாக சுடுகாட்டில் வெட்டியான் வேலை வரை அத்தனை கதாபாத்திரங்களையும் ஏற்று அதிலும் தனது எகத்தாளமான நகைச்சுவையை வெளிப்படுதியதாலேயே இன்றும் அடித்தட்டு மக்களால் கவுண்டமணி மிகவும் ரசிக்கப்படும் நடிகராக வலம் வருகிறார். கீரோயிசம் தோற்றுப்போன பல நாயகர்கள் கவுண்டமணியை நம்பி திரையுலகில் காலம் கடத்திய வரலாறும் உண்டு. இருந்தும் இன்றுவரை மேடை ஏறி யாரையும் துதி பாடாமலும், பேட்டி என்ற பெயரில் யாரையும் சீண்டிப் பார்க்காமலும், வீணான கிசுகிசு வம்புகளில் சிக்காமலும் இருப்பது இவரின் மதிப்பைக் காட்டுகிறது... கூட்டுகிறது.முக்கியமாக ஒன்றை சொல்வதென்றால் இதுவரை எந்த கட்சியையும் சாராமல், தனது ஜாதியையும் முன்னிருத்தாமல் இருப்பதை இவரது திரையுலக சாதனை என்றே சொல்லலாம்! மிதி வாங்க பல செந்தில்கள் வந்தாலும் உதை கொடுக்கும் கவுண்டமணியின் இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும். "பொறந்த வீடா? புகுந்த வீடா?" படத்தில் நடித்தது போல, குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் இனிவரும் படங்களில் நடித்து டி.எஸ். பாலையா விட்டுச்சென்ற இடத்தையும் கவுண்டமணி நிரப்ப வேண்டும்.

7 comments:

நாமக்கல் சிபி said...

உண்மைதான்! நல்ல அலசல்!

மாசிலா said...

பொதுவாக, ஒரு 'சாதாரண' தமிழன் என்கிற பிம்பத்திற்கு மனித உருவம் ஒன்று தேவை என வரும்போது அதை கவுண்ட மணியின் மொத்த பாத்திரத்தை கொண்டுதான் நிரப்ப முடியும்.

அனைவர் மனதிலும் தங்கி நிற்கும் ஒரு நல்ல கலைஞன்!

நிலா said...

தலைவர் கவுண்டமணியின் ரசிகர் மன்றத் தலைவி ஆஜர் :-)

Hariharan # 03985177737685368452 said...

கரெக்டுங்க. சில நேரங்களில் கவுண்டமணி ரொம்பவும் பேசுவதாக இருந்தாலும் நிறையச் சிரிக்க முடிந்தது.

எதோடும் இணைத்துக் கொள்ளாமல் எந்த விதமான சாயமும் இல்லாமல் கவுண்டமணி இன்றுவரை இருப்பது தனித்துவம் தான்!

NSK said...

வடிவேலுக்கு கிடைத்தது போல் ஒரு காமெடி hero கதாப்பாத்திரம் கவுண்டமணிக்கு கிடைத்திருந்தால்...நிச்சயம் கலக்கியிருப்பார்...

நல்ல நடிகர்....நல்ல பதிவு

வெயிலான் said...

உங்கள் பெயர் ஏற்கனவே பரிச்சயமான பெயர் தானென நினைக்கிறேன். ஆனந்தவிகடனில் பார்த்ததாக நினைவு. சரி தானா கவுதமன்?

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

Yenathu padaippirkku aatharavu thantha anaivarukkum nanri.

@நாமக்கல் சிபி: thangalin blog paarthaen. kovai kurumbu therigirathu... thodarattum nam natpu.

@ மாசிலா: ungalukku piditha விடுதலை,பெரியாரிஸம் yenakkum pidiththathu thaan. viduthalai pathirikkai poruppaasiriyar yenathu nanbar yenru sollikkolvathil perumaippaduhiraen.

@ நிலா: Ur native is mamsaapuram? It's near to my village. Please don't tell taht mamsaapuram as pattikkaadu. I know ur village very well. Mamsaapuram famous for volleyball & kabaaddi. (In my school days i came there to play volleyball. So, be proud abt ur village. I really appreciate ur talents... keep in touch.

@ hariharan:thangalathu பிப்ரவரி 14 message very nice. kaathalar thinam patri migavum aalamaana sinthanaiyai velippaduthi irukkireergal. Arumai.

@ Siva: We, ours wellwisher... what to tell more??!

@ வெயிலான் : unmai thaan naan aanantha vikatan & kumudam ithalgalil nagaichuvai thunukkugal yeluthi niraya velivanthullana. Ninaivupaduthiyatharkku nanri... keep in touch.. thodarattum vungal aatharavu!

Yenrum anbudan
Gauthaman D.S