Friday, February 9, 2007

தொலைந்த காதல்

நாம்
தினம்தினம்
சந்திக்கும் பூங்காவில்
இப்போதெல்லாம்
பறவைகள் கீச்சொலி
குறைந்து விட்டதாம்!

பூக்காரப்பாட்டி,
சுண்டல்பையன்,
நம்மை நாள்தோறும் வாழ்த்தும்
பிச்சைக்காரனிடமும்
நானே சொல்லிக்கொள்கிறேன்...
கொடுக்கல் வாங்கல்
முடிந்ததென்று!

உன் வரவினை
எதிர்பார்த்தே வாழ்ந்தவன்
இனி
வரவும் இல்லை...
செலவும் இல்லை!

இனி
நிறைய நேரமிருக்கும்
உன்னால் மறந்துபோன
என்னை நினைத்துக்கொள்ள
கண்கள் நனைத்துக்கொள்ள!

நீ சொல்லியோ
நான் சொல்லியோ
ஒன்றும் ஆகப்போவதில்லை
கிடக்கட்டும்
என்னுள்
உன் நினைவுகள் மட்டுமேனும்!

3 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

யதார்த்தம் தெரிகின்றது நண்பா.

Sundar Padmanaban said...

வ.கவுதமன்

உங்களோட துணுக்குகளை நிறைய படிச்சுருக்கேன். "வற்றா இருப்பு"க் காரன் என்ற முறைல உங்களோட எப்படியாவது தொடர்புகொள்ளணும்னு நெனச்சிட்டிருந்தேன்.

வலைப்பதிவு எப்ப ஆரம்பிச்சீங்க? நல்வரவு.

என்னுடைய வத்திராயிருப்பு அனுபவங்களைப் பத்தி நிறைய எழுதியிருக்கேன். இங்க இருக்கு அதெல்லாம். http://agaramuthala.blogspot.com

சொந்த ஊர்க் காரரை வலைப்பதிவில் சந்திக்க முடிந்ததி்ல் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்
"வற்றாயிருப்பு" சுந்தர்

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

எனது பதிவினை வாழ்த்திய நிலவு நண்பன், ஊர் மணத்தோடு என்னை வாழ்த்திய Sundar அன்பருக்கு நன்றி!

எனது மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் அனுப்பினால் மேலும் நிறைய பகிர்ந்து கொள்ளலாம்.