Wednesday, February 14, 2007

இப்படிக்குக் காதல்!

உன் உதடும் என் உதடும்
பேசாத தருணங்களில்
பேசட்டும் நம் உதடுகள்!


நிறையை மட்டும் பேசுவதல்ல
நிறைய பேசுவதே
காதல்!


தலைக்கவசம் உனக்கு அவசியம்
பலரையும்
விபத்திலிருந்து காப்பாற்றும்!


உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
மறந்து விடுகின்றேன்
இமைப்பதற்கு!


இது உனது கவிதை
உன்னைப் பார்த்துப் பார்த்து
எழுதியது!

6 comments:

Unknown said...

/தலைக்கவசம் உனக்கு அவசியம்
பலரையும்
விபத்திலிருந்து காப்பாற்றும்!/

தலைக்கவசம்? அல்லது முகக்கவசம்?

அனைத்தையும் ரசித்தேன் நண்பரே!!!

NSK said...

//நிறையை மட்டும் பேசுவதல்ல
நிறைய பேசுவதே
காதல்!//

நிறையப் பேசுவது காதலா இல்லை கடலையா ?
.
.
அனைத்தும் நன்று.....குறிப்பாக
"உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
மறந்து விடுகின்றேன்
இமைப்பதற்கு!"

விழி மூடாமல் சைட்டு அடிப்பதற்கு இப்படி ஒரு விளக்கமா ?!

சும்மா தமாசு.......கலக்குங்க

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

@ அருட்பெருங்கோ: நன்றி. கண்ணுக்கு பயன்படுத்தும் கண்ணாடியை மூக்குக்கண்ணாடி என்பதில்லையா? தலைக்கவசம் என்பது முகத்துக்கும் பொருந்தும்...

@ சிவகுமார்: கடலைச் செடியில் கடலை இருப்பது வெளியே தெரியாது. பிடுங்கினால் தான் உன்Mஐ தெரிய வரும். அதுபோல கடலை போடும் அனைவரிடமும் காதலிக்கும் எண்ணம் பதுங்கி இருக்கும்... வெளியே தெரியாது! கடலைக்கும் காதலுக்கும் நூல் அளவுதான் வித்தியாசம். உதட்டால மட்டுமே பேசிட்டு இருப்பேன்னு சொன்னால் கடலை. உள்ளத்தாலும் பேசுவேன்னு சொன்னால் அது காதல்!

உங்களுக்கு விளக்கம் சொல்லியே ஓஞ்சுபோய்டுவேன் போல!

NSK said...

//கடலைக்கும் காதலுக்கும் நூல் அளவுதான் வித்தியாசம்.//
'நூல் விடுவது'என்று சொல்வது அதனால் தானோ ?!
இதற்கும் விளக்கம் அளித்தால் தமிழ் மக்கள் தெளிவு பெறுவார்கள்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

நீங்கள் மிக தெளிவாக குழப்பி உள்ளீர்கள்!

அன்னம் விடு தூது, புறா விடு தூது என்றெல்லாம் சங்க இலக்கியத்தில் படித்திருப்பீர்கள் அல்லவா? அதுபோல தான் கல்விச்சாலைகளில் காதலை தெரிவுபடுத்த பாடநூலினுள் கடிதங்களை வைத்து கைமாற்றுவார்கள்.

இதனைத்தான் நூல் விடுவது என்று சொல்கிறார்கள்! தெளிவு கிடைத்ததா??

NSK said...

ரொம்பவே........