Monday, July 23, 2007

ரசம் பூசிய கண்ணாடி

மீண்டும்
பெண் பார்க்கும் படலம்
இது
ஏழாவது என நினைக்கிறேன்...

வழக்கம்போல்
கண்ணாடிமுன் அமர்ந்து
ஒற்றை வகிடெடுத்து
சிறு கற்றை முடி
நெற்றியில் தவழவிட்டு
படியத் தலைவாரி
சவுரியைத் தொங்கவிட்டு
பூக்களால் மூடிமறைத்து
இமைக்குக் கருமையிட்டு
முகத்துக்கு வெண்மையிட்டு
படபடக்கும் இதயத்தால்
வழியும் வியர்வையில்
முகப்பூச்சு நனையாமல்
ஒரு கையால் துடைத்தபடி...
மறு கையால் விசிறியபடி...
இதோ
தயாராக நான்!

எனது மனக்குமுறல்
என் வீட்டுக் கண்ணாடிக்கு
மட்டுமே புரியும்...
பிறர் பார்வைக்காக
அலங்கரிக்கும் எனக்கும்
ரசம் பூசிய கண்ணாடிக்கும்
வித்தியாசம் அதிகமில்லை!

4 comments:

நளாயினி said...

ஆண்கள் சென்று பெண்ணை பார்த்துவிட்டு திமிரா வேண்டாம் என்று சொல்லுறமாதிரி ஒரு கவிதை எழுதினா என்ன குறைஞ்சா போவீங்கள். பெண்களின் பிரச்சனைகளை எழுத பெண்கவிஞர்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஏன் கடினப்:படுறீங்கள். இந்த சினிமாவிலையும் சினிமாப்பாடலாசிரியர்கள் றொம்ப கடினப்படுகினம். தங்கடை உணர்வுகளையே பெண்களின் உணர்வுகள் என நினைத்து எழுதிவிடுகிறார்கள்.கேவலமா இருக்கு. அல்லது அழகாக சொன்னால் அசிஞ்கமா இருக்கு. பெண்ணின் உணர்வை பெண்தான் எழுதவேணும். ஆண் தீர்மானிப்பதாக இருக்க குhடாது. இந்த கவிதையில் பெண்ணின் உணர்வை நீங்கள் தீர்மானித்திருக்கிறீர்கள். இது எத்தனை தவறு தெரியுமா...? நிறைய பேசுவோம்.. தொடருங்கள்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

என்ன இத்தனை அதிரடி? அம்மாடி! என் தாயின் வலியை, என் தமக்கையின் வெறுப்பை, என் மனைவியின் அன்பை நான் எழுத எனக்கு உரிமை இல்லயா? இதர்க்கும் சேர்த்து யார் ராயல்டி வாங்கியது????

Anonymous said...

This poem really touched my heart.... hats off to u..... please continue writing such type of poems.... well done!!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//This poem really touched my heart.... hats off to u..... please continue writing such type of poems.... well done!!//

Really surprising.. for that same verse another one friend (nalayini) told as dont write like that poem!!!!

Taste differ from one another.. i know.. thanks for ur comment.. surely i will write more & more.. read my blog fully.. on ur leisure time...