அரிது அரிது
திட்டாத ஆசிரியர் அரிது!
அதனினும் அரிது
திகட்டாத ஆசிரியர்!
குருசாமி வாத்தியார்
பாடம் நடத்தினால்
படம் பார்ப்பதுபோல
அத்தனை இன்பம்!
பிரம்பினால் அடித்து
உடம்பை உழுததில்லை...
சிரிக்கப் பேசி
மனதை உளவு பார்த்து
உழுது போட்டுப்
பாடங்களை விதைப்பதில்
அவருக்கு நிகர் அவரே!
'பச்சைமா மலைபோல் மேனி..."
திருமால் வாழ்த்துப்பாடலும்
'தன்னருந்திருமேனி..."
இரட்சணிய யாத்திரிகமும்
அவர் சொல்லி நாம் கேட்டால்
மதம் கடந்து மனதினை உருக்கும்!
வீட்டுப்பாடம் தந்ததில்லை
மனப்பாடம் தேவையில்லை
அவர்நடத்திக் கேட்டது
கனவினில் கேட்டாலும்
'கடகட"வெனக் கொட்டும்!
குப்தர்கள் காலம் பொற்காலம்...
வரலாற்றில் படித்திருக்கிறேன்
எனது பள்ளி வரலாற்றில்
அவரும் ஒரு குப்தரே!
எல்லோர் பள்ளி வரலாற்றிலும்
குருசாமி வாத்தியார்
இருந்திருப்பார்
வேறு பெயர்களில்...
வேறு வேறு உருவங்களில்!
குருவும் தட்சணை கொடுக்கும்
இக்கால குருகுலக் கல்வியில்
இன்னமும் மறையாத
குருசாமி வாத்தியார்களுக்கு
வாழ்த்துக்கள்!!!
4 comments:
great
Thank you muthulaksnmi.
வாத்தியார எல்லாரும் வய்யத்தான் செய்வாங்ஞ. நீங்க என்னடான்னா கவிதையே போட்டிருக்கீங்க.
நல்லவிசயம். வாழ்த்துக்கள்!
வாத்தியார் எங்க வத்றாப்லயா இருக்காரு?
வெயிலான்.
http://veyilaan.wordpress.com
அந்த குருசாமி வாத்தியார்... என்னை நல்லமுறையில் பாதித்த பல ஆசிரியர்களின் கூட்டுக்கலவை! எனது அப்பாவும் கூட அதில் ஒருவர் தான். நீங்களும் கூட குருசாமி ஆசிரியரைக் கடந்து தான் வந்திருப்பீர்கள்.
Post a Comment