Monday, July 9, 2007

அபார்ட்மென்ட் வாழ்க்கை!

ஐந்தடுக்கு அபார்ட்மென்ட்டில்
எனது இறுதி நாட்கள்...
படுக்கையிலே நான்;
கைக்கெட்டும் தூரத்தில்
டைஜின் மாத்திரைகளும்
இருமல் சிரப்புகளும்...
மகனும் மருமகளும்
நாள் முழுக்க
அலுவலகத்திலே...
அடுத்த தலைமுறைக்குப்
பொருள் சேர்க்க!
புது ஏசி போட்டதிலிருந்து
இறுகப் பூட்டிய கதவுகளால்
கொசு வருவதில்லை...
வியர்வையும் கூட!
இதனையும் மீறி
முறுக்கேறிய ஆட்டோ அலறலும்,
தள்ளுவண்டி
வியாபாரிகளின் கூவலும்,
மேண்டலின் சீனிவாசின்
மெல்லிசையும்,
பக்கத்து வீட்டு
மீன் குழம்பு வாசனையும்,
செவியோடும், நாசியோடும்
பேசிச் செல்லும்!
அறையினுள்ளே
நடைபயிலும் போது
இடிக்கப்படும் எதிர்வீடு
என் கண்களோடு பேசும்...
எனக்கு மட்டுமே
அதன் வலி புரியும்!
இப்போது சில நாட்களாக
ஏதுமில்லா தனிமையிலே
என் மனதோடு பேச
மரணம் மட்டுமே இங்கு வரும்...
மறக்காமல்
விடைபெற்றுச் செல்லும்!

5 comments:

Chandravathanaa said...

அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையின் இறுக்கம் விளங்குகிறது.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

நன்றி. ஒட்டிய வீடுகள், ஒட்டாத உறவுகள்... இது தான் பெரும்பாலான நகரத்து அபார்ட்மென்ட் வாழ்க்கை!

Chandravathanaa said...

ஒட்டிய வீடுகள், ஒட்டாத உறவுகள்...

ம்...

விஜயன் said...

different thinking..romba nalla erukku.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

nanri saravanan.. thangkalaip[ patri therinthu kollalaamaa? ungalukkum sivakasikkum enna thodarpu?