பறையோசையின் அதிர்வில்
அவிழும் கைலியைப் பற்றியபடி
தொடரும் குத்தாட்டம்...
இவர்களின் சாராய நெடி கரைக்க
ரோஜாப்பூவைச் சுமந்தபடி
பிணம் பின்னால் வரும்!
கடைசிவரை
அழவைத்த பெற்ற உறவு
முதன்முறையாய்
அழுதபடி முன்செல்லும்!
தலையைக் காட்ட வந்த உறவுக்கூட்டம்...
ஊருக்குக் கிளம்பும்
நேரம் பார்த்தபடி உடன்செல்லும்!
பாதை மறித்து
இறுதி யாத்திரை செல்ல...
காத்திருப்போரின் சாபத்தையும்
பிணம் சுமந்து செல்லும்!
2 comments:
யதார்த்தமான கவிதை.
இங்கெல்லாம் "நல்ல சாவு"கள் வழக்கம். எனவே கூத்துக்கும் கும்மாளத்திற்கும் குறைவிருக்காது.
Post a Comment