குழந்தைப் பருவந்தொட்டே
தொட்டதெற்கெல்லாம்
அம்மாவிடம் அடிவாங்கியே
வளர்ந்து வந்தவன்...
பென்சில் தின்றதற்காக
இடக்கையிலே சூடுபட்டது
உற்றுநோக்கினால் இன்றும் தெரியும்!
இன்று அதே அம்மா
என் குழந்தையோடு குழந்தையாக...
கண்ணில் கண்ணீர்வர
கொஞ்சிக் கொஞ்சிச் சிரிக்கிறாள்!
சாக்பீஸ் தின்றாலும
சோற்றைக் கொட்டினாலும்
அதட்டாமல் திருத்துகிறாள்!
கை சூப்பச் சொல்லி
வேடிக்கை பார்க்கிறாள்!
எனக்கும் வேடிக்கையாக இருக்குது...
இத்தனை நாளாய்
இந்த மனதை
எங்கே ஒளித்திருந்தாய்?
5 comments:
OK... OK...I understand your real voice from your deep memories...
vanthuttiyaa?!!! ennadaa, aalayee kaanoomeennu paarththeen!!!
regularaa paaru... ini regularaa update panreen...
Ok, how is ur life?
Last month I met sakthimanivaasagam! Totally change in her face... thalaiyil sottai... mugamum muththi pooiduchchu!! Her voice & speacking slang only not change! He is working here in TVS. I have his phone number also.
Ok, when u will return?
யதார்த்தமான கவிதை.
ஒரு அம்மாவுக்குத் தன் பிள்ளைகளை வளர்க்கும் போது அனுபவம் போதாது.
இளமை காரணமாக பொறுமையும் போதாது.
எல்லாவற்றையும் உணர்ந்து படித்து முடிக்கும் போது பிள்ளைகள் அருகில் இருக்க மாட்டார்கள்.
உங்கள் அம்மா அதிர்ஸ்டசாலி. பிள்ளையும் பேரப்பிளைகளும் இன்னும் அருகில் இருப்பதால்
அந்தக் குறைகளை இன்று நிவர்த்தி செய்ய அவவுக்கு வாய்ப்புக் கிடைத்தள்ளது.
உங்கள் பிள்ளைகளுக்கும் அந்த நிறைந்த அன்பு கிடைக்கிறது.
தங்களது கருத்துக்கள் எனது கவிதைக்கு வலுவூட்டுகின்றன. நன்றி!
இக்கவிதையிலும் ஓரளவு கற்பனை கலந்து தான் எழுதி இருக்கிறேன். எனக்கும் நான் பிறந்த ஊருக்குமான தூரம் 500 கிலோமீட்டர்கள். அவப்போது விடுப்பு கிடைக்கும்போது மட்டுமே சந்திப்புகள் நிகழும்.
உண்மைதான். சிலசமயம் அம்மாக்கள் விட்ட தவறை தங்கள் பேரப்பிள்ளைகளில் ரசிப்பது. இங்கை கதையே வேறை. என் இப்பிடி சாப்பிடுறீங்கள். ஐயோ உங்கடை அம்மாக்கு உங்களை அடிச்சு வளக்கத்தெரியேலை. இப்பிடியா கொட்டி கொட்டி சாப்பிடுறது. தன்ரைமோன் கொட்டி கொட்டி சாப்பிடுறதை நலஇலா ரசிச்சிருக்கிறா போலை. நல்ல பிறப்புகளப்பா நீங்கள். இதை நான் ஒரு பெரிய பதிவாகவே எழுதவேணும். கட்டாயம் நேரம் கிடைக்கிறபோது எழுத முயற்சிக்கிறேன்.
Post a Comment