Monday, July 2, 2007

அமெரிக்கா "மாதிரி" சென்னைப்பட்டணம்!

(இது ஒரு பாமரத்தனமான கவிதை)

அமெரிக்கா "மாதிரி"
மாறப்போகுது
சென்னைப்பட்டணம்!
அதுல வாழ்வதற்கு
நமக்கு நாமே
பெருமப்பட்டுக்கணும்!
ராசா மாதிரி வாழ்க்கை!
அதில்
தினம் நடக்குது வேடிக்கை!

தாயத்து வித்த காலம் மாறிடுச்சு...
இப்போ தகடு விக்கிறது
பேஷனாப்போச்சு!
ரேஷன் கார்டே
இன்னும் கிடைச்சபாடில்லை...
கிரடிட்டு கார்டை வைக்க
பாக்கெட்டு பத்தலை!
அடயாளம் தெரியாதவனும்
போன் போட்டுப் பேசுறான்...
கூடப்பொறந்த மாதிரி
அட்வைசு பண்ணுறான்!
கடைசியில்
வேண்டாத வீட்டுக்கு
கடன் வாங்க வைக்கிறான்!

"சிம்ரன்" மாதிரி
பார்த்துக் கட்டின மனைவி
வேர்த்துக்கொட்டுவதோ
அண்ணாச்சி கடையில்?
இன்னைக்குப் பறிச்ச "மாதிரி"
நறுக்கி வச்ச காரட்டு...
பளபளக்கும் பாக்கெட்டு
ரிலயன்சு ப்ரெஸ்சு
அது நம்ம ஸ்டேட்டசு!

பணத்துக்கில்லை திண்டாட்டம்...
சாட்டர்டேன்னாலே கொண்டாட்டம்!
தேவலோகம் மாதிரி
டிஸ்கோதே கிளப்பு...
தேவதைகள் ஜோடி சேர
பட்டையக் கெளப்பு!
ஏதுமில்லாதவனுக்கு
ரஸ்னா...மோரு...
நம்ம லெவலுக்கு
விஸ்கி... பீரு!
தள்ளாடு... தடுமாரு...
விடிய விடிய தடம்மாறு!
ரகசியம் ஏதுமில்லா
ரகசிய உலகமிது!

சண்டே என்றாலே ஷாப்பிங்கு!
கடல் மாதிரி கடைகள்...
கண்ணைப்பறிக்கும் உடைகள்!
போத்தீசு, ஜெயச்சந்திரன்,
சென்னை சில்க்ஸ்...
பேண்டலூண், குளோபஸ்சு
லேண்ட்மார்க்கு...
லொட்டு, லொசுக்கு
எல்லாமே சுத்தியாச்சு!
வாரிக்கொட்டிக்கொட்டி
குட்டிக்காரை நிறச்சாசு!
சாணை தீட்டித்தீட்டியே
கிரடிட்டுக் கார்டெல்லாம்
கூர்மழுங்கிப் போச்சு!

வெளிநாட்டுக் கம்பனியெல்லாம்
அணிவகுக்குறான்...
வெயிலு நமக்கு பலவீனம்...
அவனுக்கோ
அது தான் மூலதனம்!
குளிரவச்சு குளிப்பாட்டி
பணம் கறக்குறான்!
டீசென்ட்டா உழைச்ச பணத்த
டீசென்ட்டா கொள்ளையடிக்கிறான்
ஏசி ஷோரூமிலே!!

2 comments:

PRINCENRSAMA said...

நல்ல படைப்பு கவுதமன்... வாழ்த்துக்கள்

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

நன்றி என்னரசு.
இந்த கவிதை எனது நடைமுறை வாழ்க்கையோடு நேரடித் தொடர்புடையதாக இருப்பதால் மிகவும் அழுத்தமாகவும், எளிமையாகவும் எழுத முடிந்தது. தங்கள் பகுதியை நேரம் ஒதுக்கி ஆழ்ந்து படித்து கருத்துக்களை எழுதுகிறேன்.