Thursday, May 28, 2009

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் அப்துல்கலாம்!

டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் எவ்வளவோ முயற்சித்தும் இலங்கை பிரச்சனையில் யாராலும் மூக்கை நுழைக்க முடியவில்லை! ஈழத்தமிழர்களை நாங்கள் பார்த்துக் கொள்(ல்)வோம்... அவர்கள் செத்தாலும் பிழைத்தாலும் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டது இந்திய வல்லரசு!

ஈராக்கினுள் நுழைந்த அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு சற்றும் குறையாமலும், உலக நாடுகளை தனது கைக்குள் போடும் விவேகத்திலும் சற்றும் அசராமலும் தான் நினைத்ததை சாதித்து முடித்துள்ளது இந்தியா! இந்த வல்லரசுத் தன்மையைத்தானே கடவுளுக்கு நிகராக இந்திய மீடியாவினால் தூக்கி நிறுத்தப்பட்ட அப்துல்கலாமும் எதிர்பார்த்தார்! இப்போது கண்டிப்பாக பூரித்துப் போயிருப்பார்!

இந்த நேரத்தில் அப்துல்கலாமை தேவையில்லாமல் சுட்டிக்காட்டவில்லை. இலங்கைப் பிரச்சனையை, தனது எழுத்து சரியான விதத்தில் வெளிக்கொணரவில்லை என்று வருத்தத்துடன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் எழுத்தாளர் அருந்ததிராய். தனது கட்சியின் தமிழர் விரோதப்போக்கு பிடிக்காமல் பதவியை உதறிவிட்டு இன்றுவரை ஈழத்தமிழனுக்காக தனியொருவனாகக் குரல் கொடுக்கிறார் தமிழருவி மணியன். எந்தவகையிலாவது ஈழத்தமிழனுக்கு விடிவு வராதா என்று திரையுலகிலிருந்து, யாரையும் எதிர்பார்க்காமல் சீமான் என்ற தனிமனிதன் போராடுகிறான். இவர்களுக்கு இருக்கும் அக்கறையில் சிறிதளவாவது, இலங்கைக்கு வெகு அருகில், ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல்கலாமுக்கு இருக்க வேண்டுமென நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு? ஒரு வார்த்தை போதாதா ஒட்டுமொத்த இந்தியர்களையும் சரியான பாதையில் சிந்திக்க வைக்க? பஞ்சாபிகளுக்காக பிரதமர் குரல் கொடுக்கும்போது தமிழர்களுக்கு எதிரான மனிதநேயப் படுகொலையை கண்டிக்கும் பொறுப்பு அப்துல்கலாமுக்கு இல்லையா?

அட, தமிழர்கள் என்று கூட வேண்டாம். நமது அருகிலுள்ள நாட்டில் நடைபெறும் படுகொலைகளுக்கு இந்தியா ஆதரவாக இருப்பது சராசரி இந்தியர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், முப்படைகளையும் நிர்வகித்த ஒரு முன்னாள் ஜனாதிபதிக்குமா தெரியாமல் போகும்? ஒரு மனிதநேயத்துடனாவது இதை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டாமா? இவர் எதிர்பார்க்கும் வல்லரசு இதுவென்றால் அப்படி ஒரு வல்லரசுக் கனவு அமெரிக்காவோடு ஒழிந்து போகட்டும்!

6 comments:

Anonymous said...

i thing he have some other reasons to not support for eelam tamils, but he loves tamil.

Anonymous said...

மேற்குலக நாடுகளுக்கு இருக்கும் அக்கறை தந்தை நாடு என்று சொல்லப்பட்ட இந்தியாவுக்கு இல்லாமல் போய்விட்டது :(

மதிபாலா said...

நேர்மையான பார்வை.

எட்டுமா உரியவர்களுக்கு ?

Unknown said...

100% I agree with you.
Im Eela Tamilian. Before we were proud of Abdul kalam because he is a tamilian. If he raises the voice something will happen in india.He is most respected person in india.This article must be published in Newspaper, then only this message reach him.
Now Eela Tamils are living without any hope even UN also not listen to our voice. Only hope is our Tamilnadu people.

Rajah

இரா.ச.இமலாதித்தன் said...

ரொம்ப அருமை.....சரியா சுட்டி காட்டி உள்ளீர்கள்...எனக்கு மிகவும் பிடிக்கிறது இந்த கட்டுரை.....

அதிகாலை பற்றி said...

தங்களின் கேள்வியும், ஆதங்கமும் நூற்றைம்பது சதவீதம் சரியானதே! இதனை நாமே எழுதிக் கேட்கலாமே!

விரைவில் கேட்போம்!
அதிகாலை நவின்