Tuesday, October 4, 2011

ஹைக்கூ சரம்!

பாகற்காயினுள்ளிருந்த புழு
எட்டிப் பார்க்கவேயில்லை
விலைபேசி வாங்கி முடிக்கும்வரை!
-----------------------------------

மெல்ல ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி
தங்கம் விலை
வற்ற வற்ற!
-------------------------------

மழை நின்ற வெயிற்பொழுதில்
இலைகளைக் காய வைக்கும்
மரம்!
-------------------------------

மகிழ்ச்சியைத் தவிர
வேறொன்றுமில்லை
மழலையின் சிரிப்பில்!
--------------------------------

பந்திக்கு முந்தாமல் தடுக்க
கையில் திணிக்கப்பட்டது
அட்சதை அரிசி!
--------------------------------

ஊருக்கெல்லாம் பெய்த மழையில்
என்னை நனைத்தன
எனக்கான மழைத்துளிகள்!
---------------------------------

இரவு வரும்போதெல்லாம்
பீதியை போர்த்திக் கொள்ளும்
தூங்காத அசைவுகள்!
---------------------------------

ஊனமுற்ற பிச்சைக்காரரை
கடக்கையில் ஊனமாகிறேன்
பையில் சில்லறையில்லாத போது!

1 comment:

விஜி said...

ஊனமுற்ற பிச்சை காரனை பார்க்கையில் பாகர்காய் மனது
மழலை சிரிப்பிற்க்கு தங்க விலை உயர்ந்தால் என்ன தாழ்ந்தால் என்ன
மழையில் நனைந்தன இலைகள்
மழையில் என்னை காயவைப்பது அவள் இதழ்கள்

உங்கள் ஹைகூ அருமை