வட்ட நிலா
சுற்றி நிறைய நட்சத்திரம்
இரவு!
மலை
உடைச்சா சிலை
அதுதான் கலை!
நண்பா!
விடிந்தது உனக்கு!
விழித்தெழு!
எழுந்து நில்!
நிமிர்ந்து நில்!
விரைந்து செல்!
தொடர்ந்து செல்!
கவுரி கிளாசுக்குக் கிளம்பிட்டா!!
தோழா!
ஆத்திரப்படு...
ஆணவம் விடு!
தீப்பந்தம் எடு...
தீமையைச் சுடு!
தீக்குச்சி எடு...
சிகரெட்டைப் பத்தவை!
கண்ணே மதி!
நீ எந்தன் பாதி
நான் உந்தன் மீதி
உன் பேச்சைக் கேட்காட்டா
"நங்கு நங்கு"ன்னு மிதி!
நீ அடுப்பானால்
நான் குக்கராவேன்!
நீ துடுப்பானால்
நான் படகாவேன்!
நீ கடுப்பானால்
நான் "எஸ்கேப்" ஆவேன்!
4 comments:
மிகவும் சுவார்சியமாக உள்ளது. நகைச்சுவையான கவிதை.
தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி நர்மதா!
எனது இந்த பிளாக்கில் இன்னும் நிறைய நல்ல கவிதைகள் குவிந்துள்ளன... நிதானமாக படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.
super.......
Post a Comment