Monday, February 25, 2008

போகிற போக்கில்...

தினமும் பைக்கில் அலுவலகத்திற்குச் செல்வது தான் வழக்கம். 12 கிலோ மீட்டர் பயணம். வேடிக்கை பார்த்தப்டி செல்வதால் அலுப்பு தட்டுவதில்லை, எனினும் டிராபிக் சிக்னல்களில் நிற்கும்போது மட்டுமே சற்று கடுப்பாக இருக்கும்.

இது பற்றி நான் எழுதிய கவிதை ஒன்று இப்போது நினைவிற்கு வருகிறது...

"ஒவ்வொரு நிறுத்தத்திலும்
ஏதோ ஒரு பெண்ணிருப்பாள்
கோபம் மறக்க!"

எப்படியோ தெரியவில்லை, கடந்த சில மதங்களாக ஒரு வித்தியாசமான பழக்கம் என்னைத் தொற்றிக்கொண்டது! ஆம், நெருக்கடியான நேரங்களிலும், சிக்னலில் நிற்க்கும்போதும் அப்படியே ஒரு நோட்டம் விடுவேன்... யார் யார் என்ன என்ன கம்பெனி ஹெல்மெட் அணிந்திருக்கிறார்கள் என்று!

பெரும்பாலும் நான் அணிகின்ற ரேங்குலர் ஹெல்மெட்டுகள்தான் முன்னிலையில் இருக்கும். (அதில் ஒரு பெருமை எனக்கு!) அடுத்ததாக வேகா, ஸ்டட்ஸ், கிமி வகை ஹெல்மெட்டுகள் பரவலாக உள்ளன. பொழுதுபோகாத பொம்மு போல இப்படி எண்ணிக்கை பார்ப்பது இப்போது வழக்கமாகவே ஆகி விட்டது! எங்கே நீங்களும் ட்ரை பண்ணிப் பாருக்களேன்!

கொசுறு தகவல்: கிமி வகை ஹெல்மெட்டுகளில் போலியாக கிவி என்ற பெயரில் சில ஹெல்மெட்டுக்களையும் பார்த்தேன்!

4 comments:

உண்மைத்தமிழன் said...

கவுதமன்.. கவிதை சூப்பர்ப்..

ஆனாலும் ஒரு காலம்வரைக்கும்தானே இக்கவிதை செல்லுபடியாகும்..

ஹெல்மெட் பற்றி நான் ஏற்கெனவே எழுதி தீர்த்திருக்கிறேன் என்பதால் இங்கே அதைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை..

ஆனாலும் கூடியவிரைவில் உங்களை அடியொற்றி இது பற்றிய சர்வே வந்தாலும் வரும்.. எதிர்பார்க்கிறேன்..

சின்னப் பையன் said...

உங்கள் பழக்கம் நல்லா இருந்தது...

//சில மதங்களாக// இந்த வரியை படிச்சிட்டு டென்ஸனாயிட்டேன்.. பிறகு தெரிந்தது அது மாதங்களாக என்று....:-))))))

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//கவுதமன்.. கவிதை சூப்பர்ப்..//
நன்றி!

//ஆனாலும் ஒரு காலம்வரைக்கும்தானே இக்கவிதை செல்லுபடியாகும்.. //
எதனால் இப்படி சொல்றீங்க?

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//உங்கள் பழக்கம் நல்லா இருந்தது... //

நீங்களும் முயற்சி பண்ணுங்க!