Friday, March 16, 2007

மனசு என்னும் அதிசயம்!

திரும்பத் திரும்ப முயற்சிக்கிறேன்...
வறண்டு போன நாக்கு,
மருண்ட பார்வை,
இருண்டு போன முகம்
அனைத்தையும் கழற்றி
சிரிப்பினை அணிய
தொடர்ந்து முயற்சிக்கிறேன்...
இருக்கையில் நான் அமர்ந்தாலும்
அமராத மனசு
பழகாத பொதிமாடு போல
நிலைகொள்ளாமல்
இங்குமங்குமாய் அலைந்தபடி...
நேர்முகத்தேர்வு புதிதல்ல,
தேர்வாகாதுபோவதும் புதிதல்ல!
இருந்தும் புரியாதபுதிராய்
எனக்கான அழைப்பினை
எதிர்நோக்கும்வேளையிலே...
எதிர்வரிசையிலே
புதிதாக ஒரு பெண்முகம்...
பார்த்ததும் மனதில் பதிந்தது;
பொதிமாடு அடங்க...
என் முகத்திலும் புன்னகை!
தேர்வறைக்குள் நுழையுமுன்
என் மனசு வேண்டியது
"அவளுக்குமிங்கே வேலை கிடைக்கட்டும்!"

2 comments:

NSK said...

நம்ம HR க்கு இந்த link - அ அனுப்பியிருக்கிறேன்........

அது போகட்டும்.....இப்பெல்லாம் நேர்முகத்தேர்வுங்ற பேர்ல, 'முகத்'தேர்வு தான் நடக்குது....
உங்களுக்கு கிடைக்குதோ இல்லயோ....'அவளுக்கு' நிச்சயம் கிடைக்கும்.

ALL THE BEST

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

பொதிமாடு எப்பவுமே அப்படித்தான்! ஓவரா எதிர்பார்த்து உள்ளதும் போச்சுடான்னு அலைஞ்சுக்கிட்டு இருக்கும்!