கருணாநிதியின் 7 மணி நேர உண்ணாவிரதம் பற்றி அவருக்கு மிகவும் பிடித்த வடிவேலு பாணியில் சொல்வதானால், ஸ்டார்ட்டிங்கு நல்லாதான் இருந்துச்சு, பினிஷிங்கு சரியில்லயேப்பா! மிகக் குறுகிய நேர உண்ணாவிரதம் என்றவகையில் கின்னஸ் சாதனை படைத்திருகும் இந்த உண்ணாவிரதத்தின் அவசர அவசியம்தான் என்ன?.
ஜெயலலிதா, தனி ஈழம் அமைவதை ஆதரித்தது கருணாநிதிக்கு உண்மையில் பயங்கர அதிர்ச்சி வைத்தியமாகத்தான் இருந்திருக்கும்! இதைவிட ஒருபடி அதிகமாக என்ன அரசியல் ஸ்டண்ட் அடிப்பது என்று இரவு முழுக்க தூங்காமல் யோசித்திருப்பார்! "நான் இரவு முழுவதும் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசின் அறிவிப்பு வருமென்று எதிர்பார்த்து விழித்திருந்தேன் என்பதில், விழித்திருந்ததற்கான காரணம் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை!
அதுபோகட்டும்... கருணாநிதியின் உண்ணாவிரதம் நம்முள் பல்வேறு கேள்விகளை எழுப்புவதை தவிர்க்க இயலாது. அவற்றை கீழே தந்துள்ளேன்.
1. கருணாநிதியின் வீட்டினருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட உண்ணாவிரத முடிவு, கடந்த ஜூனியர் விகடன் இதழில் அப்படியே கவர் ஸ்டோரியாக வந்திருந்தது எப்படி?
2. திடீரென நினைத்த இடத்தில் உண்ணாவிரதம் இருப்பவர், இதே இலங்கைப் பிரச்சனைக்காக தொடர் உண்ணாவிரதமிருந்த தாய்மார்களை, நாயினும் கேவலமாக போராட்டத்திற்கு இடம்தேடி அலைய வைத்தது நியாயமா?
3. கருணாநிதி தந்தியனுப்பியும், தீர்மானம் போட்டும், கதறியழுதும் திரும்பிப் பார்க்காத மத்திய அரசு, இப்போது சுறுசுறுப்பாக பேச்சுவார்த்தை நடப்பதுபோல காட்டிக் கொள்வதும், அதற்கு இலங்கை இசைவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைவதும் பெரிய அரசியல் சதியை வெளிப்படுத்துகிறதே? அது என்னவென்றால், கிட்டத்தட்ட, பெரும்பான்மை ஈழப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தபிறகு, போர் நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டு வரும் தருணத்தில், நீ அடிக்கிற மாதிரி அடி! நான் அழுவுற மாதிரி அழுவுரேன்! என்று கருணாநிதி, மத்திய அரசு, இலங்கை அரசு ஒரு கூட்டு நாடகத்தில் நடிப்பது போலவும், அதற்கும் நாமறிந்த வசனகர்த்தாவே இதனை இயக்கி இருப்பது போலவும் தெரிகிறதே?
4. மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் இலங்கை கேட்டு நடக்கும் என்பது உண்மையாகி விட்டது அல்லவா? இப்பொது எங்கே போனது இலங்கையின் இறையாண்மை?
5. கருணாநிதி நினைத்தால் மத்திய அரசை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஆட்டிவிக்க முடிகிறது. அப்படியானால் இத்தனை காலம், இவ்வளவு படுகொலைகள் நடந்து முடிவதற்காகத்தான் காத்திருந்தாரோ?
6. இப்போது, போர் நிறுத்தமெல்லாம் கிடயாது என்று இலங்கை அரசு மீண்டும் மறுத்திருக்கிறது. இனி, அடுத்ததாக யார், எங்கே உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்?
7. கருணா - கருணாநிதி; இருவருமே கிட்டத்தட்ட ஒன்றுதானா?
எப்படியோ, காங்கிரஸ் கூட்டணியின் அழிவுக்கு கருணாநிதியே தனது பங்கை தொடங்கி வைத்திருக்கிறார்! இன்னும் தொடரும்...
3 comments:
இன்னக்கி காலயில திடீர்னு அதிரடி நகைச்சுவை ட்ராமா ஒன்ன மொதல்வர் அண்ணா சமாதியில ஆரம்பிச்சிருக்காரு.. அப்படியே உளியின் ஓசை 2 எடுத்டுரலாம் அம்புட்டு அழுகாச்சி.. ஒரு பக்கம் கனிமொழி மினரல் வாட்டர் பாட்டில் மூடியில தண்ணி கொடுக்குராரு அதயும் அவரு வேணாம்ங்ராரு.. அப்புறம் கையில தொட்டு ஒதட்டுல தடவிக்குராரு.. இது கொஞ்சம் இல்ல நெறயவே ஓவர்னு தெரியலயா? காலவறையற்ற 3 மணி நேர உண்ணாவிரதம்? என்ன கர்மமோ.. ஓட்டுக்காக இப்படியா?? நாறுது தாங்க முடியல
கழக கண்மனிகள் தலைவரோட நோக்கம் புரியாம அங்கங்க உண்ணாவிரதம் இருந்து மொதல்வர வெறுப்பேத்தீட்டானுவ..அவ்ரு நோகம் என்னன்னா எல்லாபயலும் இருந்தா தனக்கு கெடைக்கிற பப்ளிசிட்டி போயிரும்னு நான் மட்டும் இருக்கிரேன் (அதுவும் 3 மணி நேரம் அது வேற விஷயம்).. ஸ்பெக்ட்ரம் 60000 கோடி ஊழல 1 நொடியில தீத்து வச்ச சாணக்கியர் அல்லவா? அதன் 8 மணிக்கு உண்ணாவிரதம் 10 மணிக்கு ராஜபக்சே அறிவிப்பு.. ராஜப்க்சேக்கு தெரியும் மீண்டும் காங்கிரஸ் வந்தா அவருக்கு உதவின்னு.. அதுக்காக திட்டமிட்ட நாடகம்... தாத்தாவின் நகைச்சுவை நடிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இவரு இருந்ததாலதான் போர் நிறுத்தம்னா இத்தினி நாள் இன்னா செஞ்சின்டு இருந்தாரு?? மந்திரி பதவி பேரனுக்கு வேணும்ன் ஒடனே ப்ளேன்ல போய் கடுங்குளிர்ல டெல்லியில ரூம் போட்டு அழுது அடம்பிடிச்சி வாங்குனார் இல்ல..இப்ப எதுக்கு எலெக்சன் வர்ர வரைக்கும் வெயிட்டிங்?? மேச் ஃபிக்சிங் அப்படின்னு கேள்வி பட்டிருக்கோம்..து உண்ணாவிரத ஃபிக்சிங்... அப்பட்டமான அரசியல் நகைச்சுவை நாடகம்
//கருணாநிதியின் 7 மணி நேர உண்ணாவிரதம் //
7 மணி நேரம்???
//எப்படியோ, காங்கிரஸ் கூட்டணியின் அழிவுக்கு கருணாநிதியே தனது பங்கை தொடங்கி வைத்திருக்கிறார்! இன்னும் தொடரும்...// காங்கிரசு கூட சேர்ந்து தான் அழிந்து போகனும்னு எப்பவோ முடிவு எடுத்துட்டார். திமுக - திராவிட முன்னேற்றக் கழகம் (திருக்குவளை முத்துவேல் கருணாநிதி அல்ல ) வரலாற்றை அவருக்கு யாராவது நினைவுபடுத்தினால் தேவலை.
எதுக்கு மறுபடியும்?
Post a Comment