"எங்களுக்குள்ள 'கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆனதால கூட்டணிக்கு ஒத்துக்கிட்டேன்னு தலைவர் சொல்றாரே, அதென்ன கெமிஸ்ட்ரி?"
"ஒத்துக்கலைன்னா 'ஆசிட்' ஊத்திடுவோம்னு அவங்க மிரட்டினதத்தான் சொல்றாரு!"
------------------------------------------------------
"அதென்ன கூட்டணி ஜோசியர்?"
"கிரக ராசிப்படி கூட்டணியில எத்தனை கட்சிகள் இருக்கணும், எத்தனை சீட்டு கொடுக்கணும், எந்தெந்த சீட் கொடுக்கணும், கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கணும்னு எல்லாத்தியும் புட்டுபுட்டு வைப்பாராம்!"
------------------------------------------------------
"கூட்டணி அமைக்கமாட்டேன்னு சொன்ன நம்ம தலைவரை குண்டர் சட்டத்துல கைது பண்ணிட்டாங்களாமே?"
பின்ன? இந்திய இறையாண்மைக்கு எதிரா செயல்பட்டா சும்மா விட்டுடுவாங்களா?!!"
"இவரு கூட்டணி அமைக்கிறதுக்காகவே கட்சி ஆரம்பிச்சிருக்காருன்னு எப்படி சொல்ற?
கட்சியோட பெயரே 'கூட்டணி முன்னேற்றக் கழகம்"னு தான வச்சிருக்காரு!"
------------------------------------------------------
"எதிர்கட்சித் தலைவர், செல்போன்ல ரொம்ப நேரமா உங்ககிட்ட எதுக்காகவோ கெஞ்சிக்கிட்டிருந்தாரே, ஏன்?"
"இருக்கிற எல்லாக் கட்சிகளையும் நாமளே விலைபேசிட்டதால அவரு மட்டும் தனியா போட்டியிட வெட்கமா இருக்குதாம்... வேணும்னா ஃப்ரியாவே அவரும் நம்ம கூட்டணியிலேயே சேர்ந்துக்கலாமான்னு கேக்குறாரு!"
------------------------------------------------------
2 comments:
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.
//"எங்களுக்குள்ள 'கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆனதால கூட்டணிக்கு ஒத்துக்கிட்டேன்னு தலைவர் சொல்றாரே, அதென்ன கெமிஸ்ட்ரி?"//
மானாட மயிலாட வந்தாலும் வந்தது... இந்த கெமிஸ்ட்ரி தொல்ல தாங்கலையே பா..
Post a Comment