ஒரு காலத்தில்
பச்சையம் நிறைந்து
பளபளப்பாய் இருந்திருக்கும்...
கிளை தாங்கிய பறவைக்கு
குடைதாங்கி
களைப்பாற்றி இருந்திருக்கும்...
எச்சங்கள் கூட சுமந்திருக்கும்...
காற்றின் கரம் பற்றி
விண்ணை எட்டிப் பிடிக்கவும்
முயன்றிருக்கும்...
கலகலத்து கதைபேசி
களிப்போடு மகிழ்ந்திருக்கும்...
இப்போது பச்சையம்
பழுதாகி, பழையதாகி,
இத்தனை காலமாய்
பிடித்திருந்த கிளை
பிடிக்காமல் கை விரிக்க
பிடி நழுவி, நழுவி
தரை வீழ்ந்த இலை
இன்றோ நாளையோ
அப்புறப்படுத்தப்படலாம்...
அத்தனை காலமாய்
கதை பேசிக் கலகலத்த
ஏதோ ஒரு
காற்றலையின் கரம் பற்றி!
பச்சையம் நிறைந்து
பளபளப்பாய் இருந்திருக்கும்...
கிளை தாங்கிய பறவைக்கு
குடைதாங்கி
களைப்பாற்றி இருந்திருக்கும்...
எச்சங்கள் கூட சுமந்திருக்கும்...
காற்றின் கரம் பற்றி
விண்ணை எட்டிப் பிடிக்கவும்
முயன்றிருக்கும்...
கலகலத்து கதைபேசி
களிப்போடு மகிழ்ந்திருக்கும்...
இப்போது பச்சையம்
பழுதாகி, பழையதாகி,
இத்தனை காலமாய்
பிடித்திருந்த கிளை
பிடிக்காமல் கை விரிக்க
பிடி நழுவி, நழுவி
தரை வீழ்ந்த இலை
இன்றோ நாளையோ
அப்புறப்படுத்தப்படலாம்...
அத்தனை காலமாய்
கதை பேசிக் கலகலத்த
ஏதோ ஒரு
காற்றலையின் கரம் பற்றி!
5 comments:
hii.. Nice Post
Thanks for sharing
More Entertainment
For latest stills videos visit ..
இன்றோ நாளையோ
அப்புறப்படுத்தப்படலாம்...
லேசாய் வலிக்கத்தான் செய்தது.
தரை வீழ்ந்த இலைக்குள்
மனிதர்களும் கிடக்கிறார்கள்.
----------------------
எளிமையான கவிதை
ஆனால் மனதைக் குத்தும் கவிதை
-------------------------------
நந்தினி மருதம்
நியூயார்க் 2012-07-03
கருத்துகளுக்கு நன்றி!
பிடித்திருந்த கிளை
பிடிக்காமல் கை விரிக்க
பிடி நழுவி, நழுவி
தரை வீழ்ந்த இலை// arumai
Post a Comment