Tuesday, January 29, 2008

வடிவேலுவாக மாறிய ஹர்பஜன்சிங்!!!

ஹர்பஜன்சிங் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஹர்பஜன்சிங் விவகாரத்தில் நடந்த விசாரணையில் யாரும் அறியாத சில ரசிக்கத்தக்க(!) தகவல்களை இப்பகுதியில் கொடுத்துள்ளேன்! ரகசியமாக இருக்கட்டும்!!
-----------------------------------------------------------------------------------------------
நீதிபதி: நீ சைமெண்ஸ திட்டுனியா?
ஹர்பஜன்சிங்: என்ன திட்டுனியா?!
நீதிபதி: ஏப்பா, நீ சைமெண்ஸ திட்டுனியா இல்லியா?
ஹர்பஜன்சிங்: என்ன திட்டுனியா இல்லியா?!
நீதிபதி: ஏப்பா பாண்டிங்கு, நான் சரியாதானப்பா கேக்குறேன்?
ஹர்பஜன்சிங்: என்ன சரியாதானப்பா கேக்குறேன்?!
நீதிபதி: சொன்னதயே திரும்பத் திரும்ப பேசுற நீ!
ஹர்பஜன்சிங்: என்ன திரும்பத் திரும்ப பேசுற நீ?!
பாண்டிங்: நீதிபதிய கலாய்ச்சா பார்த்துக்கிட்டு நாங்க சும்மா இருக்க மாட்டோம்.
ஹர்பஜன்சிங்: சும்ம எதுக்கு இருக்குற? கைல பேட்டத் தூக்கிக்கிட்டு அலைய வேண்டியது தான?!
பாண்டிங்: இப்ப கரெக்டா பதில் சொல்றான் சார்! இப்போ கேளுங்க!
ஹர்பஜன்சிங்: என்ன இப்போ கேளுங்க?!(இதைப்பார்த்துக்கொண்டே இருக்கும்போது சைமெண்ஸ் முகத்தில் கடுப்பேறுகிறது)
சைமெண்ஸ்: டேய், உன்னை கிரவுண்டுலயே போட்டிருக்கணும். இவ்ளோ தூரம் உன்னைப் பேச விட்டது தப்பு!
ஹர்பஜன்சிங்: ஏய்! ஸ்டாப் இட் மேன்! நீ மட்டும் இவ்ளோ தூரம் முடிவளர்த்து சடை போட்டிருக்கியே, உன்னை எதாவது கேட்டமா?
(உடனே சைமெண்ஸ் அடிக்கப் பாய்கிறார். தெண்டுல்கர் குறுக்கே விழுந்து தடுக்கிறார். ஹர்பஜன்சிங் உடனே நீளமான கோடு ஒன்றைக் கிழிக்கிறார்!)
ஹர்பஜன்சிங்: இந்த கோட்டைத்தாண்டி நீயும் வரக்கூடாது... நாங்களும் வரமாட்டோம்! பேச்சு பேச்சோட இருக்கணும்!
சைமெண்ஸ்: கோட்டைத்தாண்டி அந்தப் பக்கம் வந்தா?
ஹர்பஜன்சிங்: வந்தா நீயும் எங்க பக்கம் இருப்ப! என்ன இது சின்னப்புள்ளத்தனமா?
தெண்டுல்கர்: பாஜ்ஜி அவனுங்கள கலாய்ச்சது போதும். விட்டுடு.(மீண்டும் நீதிபதி கேட்கிறார்)
நீதிபதி: இப்போ சொல்லு, நீ சைமெண்ஸ திட்டுனியா?
ஹர்பஜன்சிங்: ஆமா திட்டுனேன்!
நீதிபதி: எதுக்கு இவனை திட்டுன?
ஹர்பஜன்சிங்: நீங்களே பாருங்க இவனோட தலைய! எங்க "தல"யே தன்னோட கூந்தல 'கட்' பண்ணிட்டு அமைதியா இருக்குறப்ப இவனுக்கு இது தேவயா?
நீதிபதி: இதுக்கு தோனி தான கோபப்படணும்? உங்களுக்கு எதுக்கு கோபம் வருது?
ஹர்பஜன்சிங்: பெரிய மனுஷன் கேக்குற கேள்வியாய்யா இது? என்னோட தலைய பாருயா! எப்படி அடக்கமா மூடிப்போட்டு இருக்குறேன்! இவன் என்னடான்னா இப்படி பப்பரப்பான்னு விரிச்சிப் போட்டுக்கிட்டு இருக்கானே!!! கம்பளிப்பூச்சி மாதிரி முடியத்தொங்கப் போட்டுக்கிட்டு பேட்டிங் பண்ணினால் எவனுக்குதான்யா பந்து போட மனசு வரும்?!!
நீதிபதி: அதுசரி, இவரப் பார்த்து குரங்குன்னு எதுக்கு சொன்ன?
ஹர்பஜன்சிங்: யோவ்! இதெல்லாம் ஒரு வசவா? எங்க ஊருப்பக்கம் வந்து பாரு! கவுண்டமணி,கவுண்டமணின்னு ஒரு அண்ணண் இருக்காரு! அவரு வய்யாத வசவாய்யா?
நீதிபதி: அப்படி என்ன திட்டிட்டாரு?
ஹர்பஜன்சிங்: போடா கோமுட்டித்தலயா! அடுப்பவாயா! நாறவாயா! தீச்சட்டித்தலயா! மொள்ளமாரி... (இப்படியே விடாமல் திட்டிக்கொண்டேபோக... இறுதியில் நீதிபதி காதில் ரத்தம் வழிகிறது!)
சைமெண்ஸ்: பிளட்! சேம் பிளட்!(நீதிபதி கண்ணீர் விடுகிறார்!)
ஹர்பஜன்சிங்: ஏய்! என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?! விடு, விடு, இதுக்குத்தான் விசாரணை வைக்காதீங்கடானு பலதடவை சொன்னேன்! கேட்டால் தான!!
(இறுதியில், வேறு வழியில்லாமல் ஹர்பஜன்சிங் மீதான தடையை நீதிபதி நீக்குகிறார்.)
இதுதாங்க உண்மையில் நடந்தது!!!

15 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

அருமையான ஜோக். சூப்பர் சிந்தனை.
ம்ம்ம்.... தொடரலாமே.....

கிஷோர் said...

பட்டைய கிளப்பிருக்கீங்க. ரொம்ப சூப்பர்ங்ணா

TBCD said...

நல்ல நகைச்சுவை..

கொசுறு :

ஒலிவாங்கியில் பதிந்ததில்..

ஹர்ப்ஜ்ஜி சொன்னது.."தேரி மா கி" யாம் (ஹிந்தி கெட்ட வார்த்தை )....அது மங்கி என்று அவர்கள் காதில் விழுந்ததாம். ;)

இக்பால் said...

உங்கள் புனைபெயருக்கு ஏத்த மாதிரியே இருக்கு உங்க பதிவு

மா சிவகுமார் said...

'அலுவலகத்தில் கணினியின் முன்பு சிரித்துக் கொண்டிருந்தேன்' என்று பலர் எழுதும் போது புரியவில்லை. இன்றைக்குப் புரிந்தது!

உண்மையிலேயே இப்படித்தான் நடந்திருக்குமோ :-)

அன்புடன்,
மா சிவகுமார்

Sen said...

kalakal karpanai..!!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//இறக்குவானை நிர்ஷன் said...

அருமையான ஜோக். சூப்பர் சிந்தனை.
ம்ம்ம்.... தொடரலாமே.....
//

நன்றி இறக்குவானை நிர்ஷன்! கண்டிப்பாக என் கவிதைகளின் ஊடே இதுபோன்ற நகைச்சுவை பதிவுகளையும் இனி எழுதுவேன்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//கிஷோர் said...
பட்டைய கிளப்பிருக்கீங்க. ரொம்ப சூப்பர்ங்ணா//

ரொம்ப ரொம்ப தாங்க்ஸுங்கண்ணா!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//TBCD said...
நல்ல நகைச்சுவை..

கொசுறு :

ஒலிவாங்கியில் பதிந்ததில்..

ஹர்ப்ஜ்ஜி சொன்னது.."தேரி மா கி" யாம் (ஹிந்தி கெட்ட வார்த்தை )....அது மங்கி என்று அவர்கள் காதில் விழுந்ததாம். ;)//

நன்றி சார். நீங்கள் சொன்ன கொசுறு செய்தியை நானும் படித்தேன் சார். இந்த கிரிக்கெட்டுக்கு "ஜென்டில்மென் கேம்" என்று எந்த கிறுக்கன் சார் பெயர் வைத்தது?!!!!!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//உங்கள் புனைபெயருக்கு ஏத்த மாதிரியே இருக்கு உங்க பதிவு//

நீங்க பாராட்டுரீங்களா இல்ல திட்டுரீங்களான்னே புரியலயே! கொஞ்சம் புரியும்படியா சொல்லப்பிடாதா?!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//மா சிவகுமார் said...
'அலுவலகத்தில் கணினியின் முன்பு சிரித்துக் கொண்டிருந்தேன்' என்று பலர் எழுதும் போது புரியவில்லை. இன்றைக்குப் புரிந்தது!

உண்மையிலேயே இப்படித்தான் நடந்திருக்குமோ :-)

அன்புடன்,
மா சிவகுமார்//

ரொம்ப நன்றி சிவகுமார். உங்களை மகிழ வைத்ததில் பெரும்பங்கு நமது கிரிக்கெட் அணியினரைச்சேரும்! சொல்ல முடியாது, இது உண்மையாகவும் இருக்கலாம்!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

நன்றி Sen!

raja said...

hi anna,

suberb imagination.
keep it up.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//hi anna,

suberb imagination.
keep it up.//

thanks raja.

Do u know me?

nithi said...

mudila gautham......
utkaarndhu yosichingalo?.....