Wednesday, September 26, 2007

ஹைக்கூ


வாஸ்து பார்க்கவும் நேரமில்லாமல்
கூட்டு முயற்சியில்
தேனீக்கள்!

வெளிச்சத்தை விழுங்கிவிட்டு
விடிய விடியத் தூக்கமில்லாமல்
நிலவு!

விருந்துக்கு யாருமே வரவில்லை
கவலையில்
வலையில் சிலந்தி!

முல்லைக்குத்
தேர் கொடுத்தவன் நினைப்பு
பேருந்தில் தொங்கும்போது!

பரிணாம வளர்ச்சியா?
பரிதாப வளர்ச்சியா?
துப்பட்டாவாக தாவணி!

9 comments:

Anonymous said...

//பரிணாம வளர்ச்சியா?
பரிதாப வளர்ச்சியா?
துப்பட்டாவாக தாவணி!//

தலைவா!
நானும் தான் தேடுறேன்
என் கண்ணில் சிக்கவே இல்லை..

Palani-Watrap said...

விருந்துக்கு யாருமே வரவில்லை
கவலையில்
வலையில் சிலந்தி!

Great...!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//தலைவா!
நானும் தான் தேடுறேன்
என் கண்ணில் சிக்கவே இல்லை..//

இது ஒருபக்கமென்றால் இன்னொரு பக்கம் ஆண்கள் வேஷ்டி கட்டுவதும் மறைந்து வருகிறது! மக்கள் மனதைப்போலவே உடைகளும் இறுக்கமாகி வருகிறது!

//Great...!//
என்ன சித்தப்பு... இந்தியா பக்கம்தான் அடிக்கடி வர்றதில்ல... இந்தப்பக்கமாவது அடிக்கடி வரலாமில்ல!! (என்னோட கவிதைக்கு பின்னூட்டம் போடுறதுக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்காங்க!!)

Palani-Watrap said...

//மக்கள் மனதைப்போலவே உடைகளும் இறுக்கமாகி வருகிறது//

Dai...enna petchu kooda Kavithai madhiri varudhu..?

Hmm fine..!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//Dai...enna petchu kooda Kavithai madhiri varudhu..?//

ellaam appadiththaan! thaanaa varuthu!!!

Sundari said...

//வெளிச்சத்தை விழுங்கிவிட்டு
விடிய விடியத் தூக்கமில்லாமல்
நிலவு!//

Good One..

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//Good One..//

thanks sundari.

Unknown said...

its good man ,made me laugh too

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

Thanks madam.