Wednesday, July 8, 2015

பகலெங்கும்
நிரம்பி வழியும் வெயிலில்
நீந்தும் நிழல்கள்
------------
நிழலை உடுத்திக் கொண்டன
துவைத்துக் காயப்போட்ட
உடைகள்...
------------
மொட்டை மாடியில்
கொடியில் காயுது துணி
தரையில் காயுது நிழல்...
------------
வெயில் கொண்டு வந்தேன்
நிழல் கொண்டு வந்தாள்
அவள்

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமை......

Judy Romero said...

இப்போதைக்கு இத்தனை அருமையான படங்கள் நம்மை மகிழ்விக்கின்றன.