நிராகரிப்பு
முதலில் வலி கொடுக்கும்
முடிவில் வழி கொடுக்கும்!
பிடிக்காததால் மட்டுமல்ல
வேறொன்று
பிடித்தாலும் இருக்கலாம்!
நிராகரிப்பின் காரணம்
நாமாகவும் இருக்கலாம்
தாமாகவும் இருக்கலாம்!
வெள்ளத்தில்
மழை வெறுத்த உள்ளம்
வறண்ட கண்மாயின்
வெடித்த நாக்கினை
மழைநீர் நனைக்கையில்
துள்ளிக் குதிக்கும்!
நிராகரிப்பில்
நிம்மதிகளும் உண்டு
பறவைகளின் நிராகரிப்புத்தான்
காடுகளாகவும்
பறவைகளின் கூடுகளாகவும்!
நிராகரிப்பு
பத்தியமாகும்போது
வைத்தியமாகிறது!
மூங்கில்
நிராகரித்த காற்றுதான்
கீதமாகிறது!
நம் நிலம்கூட
நீரின் நிராகரிப்புத்தான்!
கடலுக்கு
உப்பிட்டு வருவதால்
இன்றுவரை அபகரிக்காமல்!
கற்றுக்கொள்
நிராகரிப்பை நிறையாக்க
நிராகரிக்க!
5 comments:
அற்புதம்
நிராகரிப்பின் வழியில் வழியை கண்ட ஒருவன் சொல்கிறேன்.... மிக நன்றாக எழுதியுள்ளீர்.
வணக்கம்
ரோம்ப நல்லா இருக்கு
\\
நிராகரிப்பின் காரணம்
நாமாகவும் இருக்கலாம்
தாமாகவும் இருக்கலாம்!
\\
ஆழ்ந்த அவதானிபில் எழுதியுள்ளீர்கள்
\\
வெள்ளத்தில்
மழை வெறுத்த உள்ளம்
வறண்ட கண்மாயின்
வெடித்த நாக்கினை
மழைநீர் நனைக்கையில்
துள்ளிக் குதிக்கும்!
\\
எனக்கு தெரிந்து இந்த பத்திமட்டும் கொஞ்சம் முரண்படுவது போல் உள்ளது
கவிதை மிகவும் நன்றாக உள்ளது யோசிக்க வைக்கிறது
நன்றி
இராஜராஜன்
உணர்ந்து பாராட்டியதற்கு நன்றி!
"நம் நிலம்கூட
நீரின் நிராகரிப்புத்தான்!
கடலுக்கு
உப்பிட்டு வருவதால்
இன்றுவரை அபகரிக்காமல்!"
அருமை. ரசித்து வாசித்தேன்.
வாழ்த்துக்கள்.
சினிமா உலகம் பற்றிய எனது வலை பார்க்கவும்.
நிறை / குறை சொல்லவும்.
நன்றி.
அருமையான வரி்கள். வாசிப்பதற்கு பரிந்துரைத்த வண்ணத்துப்பூச்சியாருக்கு நன்றி.தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!
Post a Comment