Friday, October 5, 2007

செந்தில், வடிவேலுவுக்குப் போட்டியாக புட்டபர்த்தி சாய்பாபா!

ஒரு படத்தில் ஊருக்கு அருகே இருக்கின்ற மலையைத் தூக்குவதாகச் சொல்லி ஊர் மக்களை ஏமாற்றுவதாக நடிகர் செந்தில் காமடி பண்ணியிருப்பார்! இன்னொரு படத்தில் நடிகர் வடிவேலு, தனது கண்ணில் கடவுள் தெரிவதாகச் சொல்லி ஊர் மக்களை ஏமாற்றுவார்! இதையெல்லாம் மிஞ்சும்படியாக நேற்று சாய்பாபா வழக்கம்போல ஒரு "தில்லாலங்கடி" வேலை செய்திருக்கிறார்!

நேற்று (04.10.2007) சாய்பாபா குடியிருக்கும் பிரசாந்தி நிலையத்திலிருந்து, மாலை 6.30 மணிக்கு "விஸ்வரூப விராதி" நிகழ்ச்சி நடக்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. அதாகப்பட்டது, பால்கனி வழியே "தரிசனம்" கொடுத்து வந்த சாய்பாபா நேற்று மாலை 6.30 மணிக்கு நிலவிலிருந்து தரிசனம் தரப்போவதாக அறிவிக்கப்பட்டது!

வழக்கம்போல இதுபற்றி அறிவுப்பார்வை பார்க்க மறுக்கும் அவரது பக்தகோடிகள் பலரும் பிரசாந்தி நிலையத்திலிருக்கும் மைதானத்தில் கூடி விட்டனர். இவர்களோடு ஏமாற்றுக்கார சாய்பாபாவும் அங்கு வந்து சேர்ந்து கொண்டார்! பூமியில் இருக்கும் பாபா நிலவில் காட்சி தரும் அற்புதத்தைப் பார்க்கும் ஆர்வத்தோடு அனைவரும் வானத்தைப்பார்க்க, அங்கு நிலா ஆப்சென்ட்!!

நம்மளை வைத்து பாபா "காமடி கீமடி" பண்றாரோ என நினைத்துக் கொண்ட நிலா மேகத்தினுள் மறைந்துகொண்டு வெளியே தலைகாட்டவேயில்லை!! நிலவில் தரிசனம் தரக்கூடிய சாய்பாபாவாலும் நிலவை மூடி மறைத்திருக்கும் மேகக்கூட்டத்தை ஊதித்தள்ளி விலக்க முடியவில்லை!! இறுதியாக, இன்னொரு நாள் காட்சி தருவதாக பாபா சொன்னதும் கூட்டம் ஏமாற்றத்துடன் கலைந்தது!!!

தமிழ்த் திரைப்படத்துறையினர் இந்த காமெடி நிகழ்ச்சியை தங்கள் அடுத்த படத்தில் சேர்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்!!!

17 comments:

திரு said...

:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தன் முகத்தை நிலவில் பார்க்க கூட்டத்துடன் அவரும் நின்றாரா??ஏன் நிலவில் பார்க்க வேண்டும். நேரே பார்க்கக் கூடாதா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by the author.
மாசிலா said...

//தமிழ்த் திரைப்படத்துறையினர் இந்த காமெடி நிகழ்ச்சியை தங்கள் அடுத்த படத்தில் சேர்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்!!!//

நீங்க பணம் போடுவீங்களா?

;-D

எல்லாம் கூத்தே! ஏமாகிறவங்க இருக்கிற வரைக்கும் இதுவும் நடக்கும் இதுக்கு மேலேயும் ...

நன்றி கவுதமன்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//தன் முகத்தை நிலவில் பார்க்க கூட்டத்துடன் அவரும் நின்றாரா??ஏன் நிலவில் பார்க்க வேண்டும். நேரே பார்க்கக் கூடாதா?//

இந்த கேள்விக்கு சாய்பாபா தான் பதில் சொல்லணும்!

இந்த சம்பவத்தை இன்றைய தினத்தந்தி இதழில்தான் படித்துத் தெரிந்து கொண்டேன். இச்செய்தியை வெளியிட்ட தினத்தந்தியை பாராட்டியே ஆக வேண்டும்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//நீங்க பணம் போடுவீங்களா?//

வடிவேலு, செந்திலை நம்பி பணம் போடலாம்... சாய்பாபா பண்ற காமெடி அந்த அளவுக்கு எடுபடுமான்னு தெரியல சார்!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//:)//

:))

Mohan said...

ithellam arasiya'la sakajamappa......;))))

Siva said...

என்ன கொடுமை கவுதம் இது !

பாபா பெரிய லெவெல் மேஜிக்குக்கு தயார் ஆகிறாரோ..சொர்க்காருக்கு போட்டியாக ?!

Anonymous said...

ராமனைப் பத்தி என்ன வேணும்னாலும் எழுது. தயாளு அம்மையாரே காலில் விழுந்து வணங்கிய சாய்பாபாவைப் பற்றி எழுதினால் ஆட்டோ வரும் என அன்புடன் எச்சரிக்கிறோம்.

இவன்
கலைஞர் பகுத்தறிவு பாசறை

Anonymous said...

சாய்பாபாவ கிண்டல் பண்ணி கிருஷ்ணா நதிநீர் கால்வாய் திட்டத்திற்கு உதவ முன் வந்தத தடுக்க வேண்டாமே.
மத்தபடி அவரு நிலாவுல முகத்த காட்றாரோ, பிலிம் காட்றாரோ who cares...?

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//ராமனைப் பத்தி என்ன வேணும்னாலும் எழுது. தயாளு அம்மையாரே காலில் விழுந்து வணங்கிய சாய்பாபாவைப் பற்றி எழுதினால் ஆட்டோ வரும் என அன்புடன் எச்சரிக்கிறோம்.//

ஆகா! இங்கயும் முகமூடி போட்டுக்கிட்டு வந்துட்டானுங்கய்யா!!!
கலைஞர் பெயர் இப்போ உனக்கு கேடயம்... அவருடைய கருத்துக்கள் என்றைக்குமே எனக்கு போர்வாள்டா எங்கொய்யால!
ராமன் பெயரை சொல்லிக்கோ.. கலைக்னர் பெயரை களங்கப்படுத்தினால் உன் வீட்டுக்கு நானே வருவேன்!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//பாபா பெரிய லெவெல் மேஜிக்குக்கு தயார் ஆகிறாரோ..சொர்க்காருக்கு போட்டியாக ?!//

அமெரிக்காக்காரன் ரக்கெட்டுல நிலாவுக்குப் போன சாதனையை முறியடிக்க நம்ம பாபாவை விட்டால் யாரால் முடியும்??

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//ithellam arasiya'la sakajamappa......;))))//

hihi..hihi... hihihihihihi!!!!!!

Palani-Watrap said...

Good Catch...

In that movie, People accept Senthil as 'Intelligent guy'. So Baba also proved as he is.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//In that movie, People accept Senthil as 'Intelligent guy'. So Baba also proved as he is.//

Sure... senthil market ippo down.. so, good chance for baba!

no need of nickname i am ganesh said...

gowthaman ellam nallathan irukku don't downgrad your position to answering anonimous comments and don't think kalaiger is gem he is another saibaba
ganesh