நிராகரிப்பு
முதலில் வலி கொடுக்கும்
முடிவில் வழி கொடுக்கும்!
பிடிக்காததால் மட்டுமல்ல
வேறொன்று
பிடித்தாலும் இருக்கலாம்!
நிராகரிப்பின் காரணம்
நாமாகவும் இருக்கலாம்
தாமாகவும் இருக்கலாம்!
வெள்ளத்தில்
மழை வெறுத்த உள்ளம்
வறண்ட கண்மாயின்
வெடித்த நாக்கினை
மழைநீர் நனைக்கையில்
துள்ளிக் குதிக்கும்!
நிராகரிப்பில்
நிம்மதிகளும் உண்டு
பறவைகளின் நிராகரிப்புத்தான்
காடுகளாகவும்
பறவைகளின் கூடுகளாகவும்!
நிராகரிப்பு
பத்தியமாகும்போது
வைத்தியமாகிறது!
மூங்கில்
நிராகரித்த காற்றுதான்
கீதமாகிறது!
நம் நிலம்கூட
நீரின் நிராகரிப்புத்தான்!
கடலுக்கு
உப்பிட்டு வருவதால்
இன்றுவரை அபகரிக்காமல்!
கற்றுக்கொள்
நிராகரிப்பை நிறையாக்க
நிராகரிக்க!