Friday, July 11, 2008

வெட்கமேயில்லை...
விளக்கைக்கூட அணைக்காமல்...
மின்மினிப்பூச்சிகள்!

ஊடல்!

கோபம் உன்னோடுதான்
என்னோடுகூட பேச மனமில்லாமல்
நான்!

உன்னோடு பேச்சடக்குவது
கடினமாயிருக்கிறது
நீருக்குள் மூச்சடக்குவதை விட!

நீ இருந்ததை உணரவில்லை
இப்போது உணர்கிறேன்
வெறுமையை!

மௌனப்பார்வை போதும்
என்
மௌனத்தை நொறுக்க!