Thursday, June 14, 2007

ராமர் பாலமும் அனுமார் கூட்டமும்!

கல்லைக் கடவுளென்று
காட்சியாக்கி
காசு பார்க்கும் கூட்டம்
கடல்
கொட்டிக் குவித்த
மணல் திட்டுகளைப்
பாலமென்று சொல்லுது...
சீதையை மீட்கச் சென்ற
பாதையென்றும் சொல்லுது!

இன்று
ராவணனும் இல்லை...
சீதையும் இல்லை...
அட,
ராமனும் கூட
கோர்ட்டுக்கு வரவில்லை...
சாட்சி சொல்ல!
யாரிடம் விசாரிக்க?
கேட்குது நீதிமன்றம்...
பதிலைக் காணோம்!

ஈழத்தமிழரை
மீட்க வழியில்லை...
இல்லாத சீதையை மீட்க
சொல்லுது புதுக்கதை!
நல்லவேளை...
இந்த நாசவலையில்
வீழவில்லை நாசா!

ராமனே
கட்டினால் தான் என்ன?
வெட்டியாய் இருப்பதை
வெட்டினால்தான் என்ன?
ராமாயண கதையில்
சுயநலமாக எழுந்ததை
மகாபாரதத்தின்
பொதுநலனுக்காக
குடைவது தவறா?

சீதையை காப்பாற்றிய
ராமன்...
இன்று மீண்டும்
யுத்தகளத்தில்...
ராஜபக்சேவை காப்பாற்ற!

அண்டைநாட்டுக்கு,
நம் வளர்ச்சியில்
பயம் கொண்ட
அயல்நாட்டுக்கெல்லாம்
ஆகாத திட்டம்...
இவர்களுக்கும்
ஆகாமல் போனதில்
வியப்பில்லை!
செவிகிழியக் கேட்குது
இவர்களின்
கோஷமும் வேஷமும்...
பாரத் மாதாகீ ஜே!

9 comments:

கோவி.கண்ணன் said...

//ராமாயண கதையில்
சுயநலமாக எழுந்ததை
மகாபாரதத்தின்
பொதுநலனுக்காக
குடைவது தவறா?
//

மகாபாரதம் - இந்தியா என்ற பொருள் பட எழுதி இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது.

Palani-Watrap said...

Gautham,

Really good. Thinking in the same line.

As we all know, many temples are diminishing without proper maintenance. Nobody take care about them. For political and financial benefits they are creating issues against any project.

However, the best part is people understand their cheap stunts and ignoring their call to stop the projects like this.

In China, a Dam project vanished a village which was 1000 years old!! They sacrificed it for a big power project.

But in this case, we do not have any scientific proof for the bridge was constructed by men. Hence, we may sacrifice with closed eyes.

Even if Raman is alive, he would have allowed to continue the project...

In conclusion...

Yes...we should protect antique things till it is not blocking our growth.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//மகாபாரதம் - இந்தியா என்ற பொருள் பட எழுதி இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது.//
நன்றி!
அவர்கள் பெருமையாக சொல்லிக்கொள்வது இந்த இரண்டு கதைகளைத் தானே?

//In China, a Dam project vanished a village which was 1000 years old!! They sacrificed it for a big power project.//

நல்ல கருத்து பழனி... நீ உலகம் சுற்றும் வாலிபன் என்பதால் சைனா பற்றிய உனது கருத்தும் சரியாகத்தான் இருக்கும்.

//Even if Raman is alive, he would have allowed to continue the project...//

கடவுள் என்பதும், வழிபாடு என்பதும் மக்களை நல்வழிப்படுத்த வந்தது என்பதை விட ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டும் மற்ற அனைவரையும் அடிமையாக்க கொண்டுவந்த செயல்முறை என்பதே உண்மை.

Ravi said...

Dear Gautham,

Very fantastic and practical thinking, I realy appreciate you.
- Ravi Samuel, Dubai

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//Very fantastic and practical thinking, I realy appreciate you.
//

Thank you so much sir.

தமிழச்சி said...

//கல்லைக் கடவுளென்று
காட்சியாக்கி
காசு பார்க்கும் கூட்டம்...//
தொடரும் அறியாமை. காசு பார்க்கும் கூட்டத்தின் சுயரூபம் உளுத்துப் போகும் ஓர் நாள்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

உங்கள் அருள்வாக்கு பலிக்கட்டும்... மாதாஜி தமிழச்சி!

தமிழச்சி said...

//உங்கள் அருள்வாக்கு பலிக்கட்டும்... மாதாஜி தமிழச்சி! //

தோழர் கவுதம்!
தமிழ்சமூதாயம் நாசமாகப் போவதற்கு காரணமே அலங்கார வார்த்தைகளால் தான். அருள்வாக்கு, மங்களம், குருஜி, மாதாஜி, இந்த வார்தைகளெல்லாம் முட்டாள்களுக்கு உரியது.

கவிதைகளில் பகுத்தறிவை மிளிர வைக்கும் நீங்கள் இப்படிப்பட்ட சொற்களை உபயோகிக்கலாமா?

ஓர் பகுத்தறிவாளன் பேசும் போது வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமா? இல்லையா?

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//உங்கள் அருள்வாக்கு பலிக்கட்டும்... மாதாஜி தமிழச்சி! //

//தோழர் கவுதம்!
தமிழ்சமூதாயம் நாசமாகப் போவதற்கு காரணமே அலங்கார வார்த்தைகளால் தான். அருள்வாக்கு, மங்களம், குருஜி, மாதாஜி, இந்த வார்தைகளெல்லாம் முட்டாள்களுக்கு உரியது.

கவிதைகளில் பகுத்தறிவை மிளிர வைக்கும் நீங்கள் இப்படிப்பட்ட சொற்களை உபயோகிக்கலாமா?

ஓர் பகுத்தறிவாளன் பேசும் போது வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமா? இல்லையா?//

கண்டிப்பாக எனது பதிலீட்டினைப் படித்தவர்கள் "இப்படித் தானய்யா நாலு வார்த்தை வித்தியாசமா பேசினால் உடனே அவங்களை சாமியார்களாக, அவதாரங்களா மாத்திடறோம்" என்ற உண்மையினை மனதினுள் கண்டிப்பாக நினைப்பார்கள்.

ஒரு உண்மையை விளங்கவைக்க தொடர்ந்து போதித்துக்கொண்டே இருப்பது பொதுவான முறை. நையாண்டித்தனமாக, "சுருக்கெனச்சொல்லி விளங்க வைப்பதும் இன்னொரு முறை. எனக்கு இதில் மிகுந்த நம்பிக்கை உண்டு. பெரியாரும் பல்வேறு இடங்களில் இதைத்தான் பயன்படுத்தி இருப்பார். அந்த ஆர்வக்கோளாறினால்தான் நான் பாமரனாக மாறி தங்கள் சிந்தனையை அருள்வாக்காக மாற்றிவிட்டேன். இதனை தடுமாற்றமென நினைத்துக்கொள்ள வேண்டாம்.