இது
உறக்கத்திற்காக மட்டுமல்ல
உறவுகளின் இறுக்கத்திற்காகவும்!
நிறங்கள் கலவி செய்யும்
நிறவேற்றுமையில்லா
நேரமிது!
நில்லாமல் சுழலும் வாழ்க்கையில்
இயற்கை
நமக்களிக்கும் நிழல்!
இரவின் வானத்தில்
வானவில்லாய்
கனவுகள்!
உடல்கள் உறங்க
கனவுகள்
கண்டபடி திரியும்!
இங்கு
எல்லைகள் ஏதுமில்லை
விடியலைத் தவிர!